விஜய் எனக்கு எப்பவுமே அண்ணன் தான் – அஜித் ரசிகன் சிம்பு

சிம்பு தனது தொடக்க காலத்தில் அஜித் ரசிகராக அறியப்பட்டவர். திடீர் என்று தன்னை விஜய் ரசிகர் என்று கூற சமூக வலைதளங்களில் பரபரப்பானது. அஜித் – விஜய் இருவரின் ரசிகர்களும் மோதிக் கொண்டனர்.

விஜய் – அஜித் இருவரில் யாரை பிடிக்கும்? விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா? என்று ஒரு பேட்டியில் சிம்புவிடம் கேட்கப்பட்டது.’ எனக்கு விஜய் அண்ணாவை பர்சனலாத் தெரியும், பிடிக்கும். சினிமாவில் எனக்கு அஜித் சாரைப் பிடிக்கும். நான் எப்பவும் வெளிப்படையா இருந்திருக்கேன்.

அந்த வி‌ஷயத்தை விஜய் அண்ணா தப்பா எடுத்துக்கிட்டதில்லை. அவருக்கு நான் உண்மையா தான் இருக்கேன். அது அவருக்குப் பிடிக்கும். அவர் நல்லா நடிச்சிட்டு இருக்கார். சமுதாயத்து மேல அக்கறை இருக்கு. பின்னாடி அவர் அரசியலுக்கு வரவும் வாய்ப்பு இருக்கு.

நான் எப்பவும் அவர்கிட்ட தம்பியா பழகியிருக்கேன். அவர் அப்போ யார்கிட்டேயும் அவ்வளவா பேசமாட்டார். நிகழ்ச்சிகள்ல பார்த்தா நான் மட்டும் அவர்கிட்ட போய் பேசுவேன். அப்புறம் ரெண்டு பேரும் அவ்வளவா நெருக்கமாகலை. ஆனா, எப்பவும் அவர் எனக்கு அண்ணன் மாதிரிதான்.’ என்று கூறி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *