சர்தார் வல்லபாய் படேலின் 143 வது பிறந்தநாள் – ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு மரியாதை

இந்தியாவின் ‘இரும்பு மனிதர்‘ என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் டெல்லியில் உள்ள படேல் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதற்கிடையே குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான வல்லபாய் படேல் சிலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். மேலும் நாட்டின் ஒற்றுமையை குறிக்கும்வகையில், சிலை அருகே உருவாக்கப்பட்டுள்ள ஒற்றுமை சுவரையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் இந்த சிலை நிறுவப்பட்டு உள்ளது.

படேல் சுதந்திர இந்தியாவின் முதலாவது துணைப் பிரதம அமைச்சராகவும், முதல் உள்துறை மந்திரியாகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கியதில் படேல் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *