ஐ.எஸ்.எல் கால்பந்து – கவுகாத்தி அணியை வீழ்த்தி மும்பை வெற்றி

5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கவுகாத்தியில் நடந்த 32-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) வீழ்த்தி 4-வது வெற்றியை பதிவு செய்தது. வெற்றிக்குரிய கோலை 4-வது நிமிடத்தில் அர்னால்டு இசோகோ அடித்தார். கவுகாத்தி அணிக்கு இது முதலாவது தோல்வியாகும். 6-வது ஆட்டத்தில் ஆடிய அந்த அணி 3 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி என்று 11 புள்ளிகள் பெற்றுள்ளது.

இன்றைய ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா- எப்.சி. புனே சிட்டி (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *