இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு திமுக, காங்கிரஸ் தான் காரணம் – அமைச்சர் ஜெயக்குமார்

இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு காரணமாக இருந்த திமுக, காங்கிரசை கண்டித்து நடந்த சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கொளத்தூரில் ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை வி.என்.ரவி, தி.நகர் சத்யா, ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஜயகுமார் எம்.பி. ஜெய வர்த்தன் எம்.பி., நட்ராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.

அமைச்சர் ஜெயக்குமார், கோகுல இந்திரா, மருது அழகு ராம், நடிகர் அஜய் ரத்தினம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

வங்ககடலில் இருந்து ஒரு சொம்பு நீர் எடுத்தால் வற்றிவிடுமா? அ.தி.மு.க. என்றுமே பிளவுபடாது.

இலங்கையில் இனப் படுகொலை நடைபெற்ற போது ஆட்சியில் இருந்தது தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி தான், தி.மு.க. தலைவர் கருணாநிதி குடும்பம் வளம் பெறும் துறைகளை பெற்று ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரக் குடும்பமாக உள்ளது.

ஒவ்வொரு தமிழர்களும் அழுது, வேதனையை சொல்ல முடியாமல் தவித்தது. அப்போது ஸ்டண்ட் அடித்தது தி.மு.க. வித்தைகள் காட்டுவதிலும் சிறந்தது உலகிலேயே தி.மு.க. தான், பச்சோந்தி போல அவ்வப்போது நிறத்தை மாற்றிக்கொள்ளும் கட்சி தி.மு.க.

கருணாநிதி அன்றைக்கு முதல்வராக இருந்த போது தமிழர்கள் கொல்லப்படுவது பற்றி ஏன் என்று கேட்கவில்லை. குடும்பத்திற்காக இலாகாக்களை பேசினார்கள் தமிழினத்தினை காக்கவில்லை.

டெல்லியில் ராஜபக்சே பேட்டியில் தெளிவாக சொல்லிவிட்டார். இனப் படுகொலையை இந்திய அரசின் துணையோடு நடத்தியதாக கூறிவிட்டார். இதற்கு அன்று ஆட்சியில் இருந்த தி.மு.க-காங்கிரஸ் பதில் சொல்ல வேண்டும்.

தி.மு.க.-காங்கிரஸ் சர்வதேச குற்றவாளி கூண்டில் நிற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *