Tamilசெய்திகள்

நியூசிலாந்து துப்பாக்கி சூடு – உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு தெலுங்கான அமைச்சர் நேரில் ஆறுதல்

நியூசிலாந்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மசூதிகளில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 5 பேர் இந்தியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களின் உடல்களை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட ஐதராபாத்தைச் சேர்ந்த ஒசைர் காதரின் குடும்பத்தினரை தெலுங்கானா உள்துறை மந்திரி முகமது மஹ்மூத் அலி சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், ஒசைர் காதரின் உடலை விரைவில் இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு கடிதம் எழுதி உள்ளார். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த அகமது இக்பால் ஜகாங்கிரின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் ஐதராபாத்தைச் சேர்ந்த பர்ஹாஸ் அசன் என்பவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களின் குடும்பத்தினர் ஏற்கனவே நியூசிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *