Tamilசெய்திகள்

அரசு மருத்துவமனைகளில் அதிநவீன புற்றுநோய் மையம்! – அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.15 லட்சம் செலவில், 8 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள வலி நிவாரணம் மற்றும் ஆதரவு மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். அப்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக அமைச்சர் விஜயபாஸ்கர் வண்ண பலூன்களை பறக்க விட்டார்.

தமிழ்நாட்டில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, காஞ்சீபுரம் அரசு அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை உள்ளிட்ட 10 அரசு ஆஸ்பத்திரிகளில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.210 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சிகிச்சையானது உடலின் மற்ற உறுப்புகளில் பாதிப்பு ஏற்படாத வகையில், புற்றுநோய் பாதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் கதிர்வீச்சு செலுத்த பயன்படும் ‘லீனியர் ஆக்ஸிலரேட்டர்’ என்ற நவீன கருவி மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், தேசிய நல்வாழ்வு குழும இயக்குனர் டாக்டர் திரேஸ் அகமது, மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *