வெற்றி, தோல்விக்கு சிவகார்த்திகேயன் வாக்கை சேர்க்க மாட்டோம் – தலைமை தேர்தல் அதிகாரி

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலின் போது நடிகர் சிவகார்த்திகேயன் வளசரவாக்கம் குட்ஷெப் பர்டு பள்ளி வாக்குச் சாவடியில் ஓட்டு போட்டார். அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை.

அவரது பெயர் எப்படி பட்டியலில் இல்லாமல் போனது என்பது குறித்து விசாரிக்க சொல்லி இருக்கிறோம். அவரை எப்படி ஓட்டு போட அனுமதித்தார்கள் என்பது பற்றியும் அறிக்கை கேட்டு இருக்கிறோம்.

இதில் யார் தவறு செய்தார்கள் என்பது கண்டறியப்பட்டு தவறு செய்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எ வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே சிவகார்த்திகேயன் வாக்கு அளித்த விவரத்தை தேர்தல் கமி‌ஷனுக்கு தெரிவித்து இருக்கிறோம்.

ஓட்டு எண்ணிக்கையின் போது வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க ஒரு ஓட்டு தேவை என்ற நிலை வந்தால் இவருடைய ஓட்டு கணக்கில் எடுக்கப்படாது. இதுபோல் நடிகர் ஸ்ரீகாந்த் ஓட்டு அளித்த விவகாரம் குறித்தும் அறிக்கை கேட்டுள்ளோம்.

மதுரையில் ஓட்டு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்த அறைக்கு தாசில்தார் சென்ற விவகாரம் தொடர்பாக சிறப்பு தேர்தல் அதிகாரி பாலாஜி விரிவான அறிக்கை தந்துள்ளார். அதை தேர்தல் கமி‌ஷனுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

மாவட்ட தேர்தல் அதிகாரியான மதுரை கலெக்டர் மீது நடவடிக்கை இருக்குமா? இல்லையா? என்பதை தேர்தல் கமி‌ஷன் தான் முடிவு செய்யும்.

கரூர் தொகுதியிலும் ஓட்டு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு பாதுகாப்பு ஏற்பாடு சரியில்லை என காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி புகார் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி விசாரித்து அறிக்கை தர சிறப்பு தேர்தல் அதிகாரி ராஜாராம் சென்றுள்ளார். அவர் விரைவில் அறிக்கை சமர்ப்பிப்பார்.

தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்தாலும் இன்னும் பறக்கும் படை கண்காணிப்பு குழு தொகுதிக்கு ஒன்று வீதம் செயல்பட்டு வருகிறது. இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளில் தலா 3 பறக்கும் படைகளும், கண்காணிப்புக்குழுகளும் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *