‘வி லவ் யூ தலைவா’ வெளியானது பேட்ட டீஸர்- ரசிகர்கள் கொண்டாட்டம்

ரஜினிகாந்த் நடிப்பில் ஜிகர்தண்டா இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் பொங்கல் திருநாளுக்கு வெளியாக இருக்கும் பேட்ட படத்தின் டீஸர் சற்று முன்பு வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒன்றரை நிமிடங்கள் ஓடும் இந்த டீசரில் ரஜினிகாந்த் இரண்டு கெட்டப்களில் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். முன்னதாக படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இன்று காலை சரியாக 11 மணியளவில் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பேட்ட டீஸர் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் இந்த டீசரில் ரஜினிகாந்த் தவிர படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களான விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன் யாரும் காட்டப்படவில்லை.

பேட்ட டீஸர்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *