விஜய் ஆண்டனியுடன் இணைந்த சுரேஷ் கோபி

கொலைகாரன், அக்னிச் சிறகுகள் படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது தமிழரசன், காக்கி படடங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் தமிழரசன் படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்க, விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். சோனு சூட் வில்லனாகவும், பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

இந்த நிலையில், பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபியும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டாக்டர் தோற்றத்தில் விஜய் ஆண்டனியுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர் கடைசியாக விக்ரமின் `ஐ’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி இந்த படத்தை தயாரிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *