ரஞ்சி டிராபி கிரிக்கெட் – கோவாவை வீழ்த்தி குஜராத் அரையிறுதிக்குள் நுழைந்தது

ரஞ்சி டிராபி காலிறுதி ஆட்டம் ஒன்றில் குஜராத் – கோவா அணிகள் மோதின. கோவா அணிக்கு 629 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது குஜராத். ஆனால் கோவா 164 இன்னிங்சில் சுருண்டதால் குஜராத் 464 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. தேசாய் 5 விக்கெட்டும், அர்ஜான் நக்வாஸ்வல்லா 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

குஜராத் முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 602 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்திருந்தது. பின்னர் கோவா முதல் இன்னிங்சில் 173 ரன்னில் சுருண்டது. குஜராத் 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *