Tamilவிளையாட்டு

ரஞ்சி டிராபி கிரிக்கெட் – மழையால் சில போட்டிகள் பாதிப்பு

ரஞ்சி டிராபி 2019-2020 தொடரின் 4-வது சுற்று போட்டிகள் நேற்று தொடங்கின. மகாராஷ்டிரா – சர்வீசஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் மகாராஷ்டிரா 44 ரன்னில் சுருண்டது. அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய சர்வீசஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் சேர்த்துள்ளது.

உத்தரகாண்ட் அணிக்கெதிராக அசாம் 5 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் சேர்த்துள்ளது. ரியான் பராக் சதம் (104) அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

பீகாருக்கு எதிராக மிசோரம் 2 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் பிராடிக் தேசாய் 192 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார்.

கோவாவுக்கு எதிராக மணிப்பூர் 106 ரன்னில் சுருண்டது. பின்னர் கோவா 2 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் அடித்துள்ளது. தொடக்க வீரர் சுமிரன் அமோன்கர் (115) சதம் அடித்தார்.

ஜம்மு-காஷ்மீருக்கு எதிராக ஜார்கண்ட் 4 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் அடித்துள்ளது.

ஐதராபாத் அணிக்கெதிராக கேரளா 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் சேர்த்துள்ளது.

டெல்லி அணிக்கெதிராக பஞ்சாப் 8 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் அடித்துள்ளது.

ஆந்திர பிரதேசம் அணிக்கெதிராக ராஜஸ்தான் 151 ரன்னில் சுருண்டது. பின்னர் ஆந்திர பிரதேசம் 2 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் அடித்துள்ளது.

மத்திய பிரதேசம் அணிக்கெதிராக இமாச்சல பிரதேசம் 175 ரன்னில் சுருண்டது. மத்திய பிரதேசம் 4 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் அடித்துள்ளது.

கர்நாடக அணிக்கெதிராக மும்பை 194 ரன்னில் சுருண்டது. பின்னர் கர்நாடகா 3 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் அடித்துள்ளது.

ரெயில்வேஸ் அணிக்கெதிராக பரோடா 201 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் ரெயில்வேஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்துள்ளது.

திரிபுரா – ஒடிசா, மேகாலயா – புதுச்சேரி, நாகலாந்து – சண்டிகர், சிக்கிம் – அருணாச்சல பிரதேசம், சத்தீஸ்கர் -ஹரியானா, பெங்கால் – குஜராத், உத்தர பிரதேசம் – தமிழ்நாடு அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் தொடங்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *