மோகன் ராஜா இயக்கத்தில் பிரஷாந்த்!

ஆயுஷ்மன் குரானா, தபு நடித்த ‘அந்தாதுன்’ திரைப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியில் வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. ‘தி பியானோ டியூனர்’ என்ற பிரெஞ்சு படத்தின் தழுவலாக உருவான இந்த படம், வசூலில் மகத்தான வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளையும் வென்றது.

பிரம்மாண்ட வெற்றியால், இந்தப் படத்தை இதர மொழிகள் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டி வந்தனர். அந்த வகையில், தமிழில் இதன் ரீமேக் உரிமையை கைப்பற்ற தனுஷ், சித்தார்த், பிரசாந்த் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இறுதியில் நடிகர் பிரசாந்த் அதனை கைப்பற்றினார். ஆயுஷ்மன் குரானா வேடத்தில் பிரசாந்த் நடிக்க உள்ளார். இப்படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜெயம் ரவியின் சகோதரரான இவர், ரீமேக் படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர். அவ்வாறு இவர் இயக்கிய பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக தான், அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கை மோகன் ராஜா இயக்கினால் சரியாக இருக்கும் என பிரசாந்த் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *