மலேசிய ஓபன் பேட்மின்டன் – முதல் சுற்றில் சாய்னா அதிர்ச்சி தோல்வி

மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால், தாய்லாந்து வீராங்கனை போர்ன்பவீ சோச்சுவாங்கை எதிர்கொண்டார்.

இதில் செட்டை சாய்னா கடும் போராட்டத்திற்குப்பின் 22-20 எனக் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை 15-21 எனவும், 3-வது செட்டை 10-21 எனவும் இழந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

ஒற்றையர் போட்டியில் ஸ்ரீகாந்த் மற்றும் பிவி சிந்து ஆகியோர் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *