மணிரத்னத்தின் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா

வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால் முன்னணி நடிகர், நடிகைகள் அவற்றில் நடிக்க தொடங்கி உள்ளனர். ஜெயலலிதா வாழ்க்கை கதையான குயின் வெப் தொடரில் ரம்யாகிருஷ்ணன், சோனியா அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர். பாபி சிம்ஹா, பிரசன்னா, பரத், மீனா, நித்யா மேனன் ஆகியோரும் வெப் தொடர்களில் நடித்துள்ளனர். சத்யராஜ், சீதா ஆகியோர் தாமிரா இயக்கும் வெப் தொடரில் நடிக்கின்றனர். காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா, பிரியா பவானி சங்கர், பிரியாமணி போன்ற முன்னணி நடிகைகளும் வெப் தொடர்களுக்கு மாறுகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவும் வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி உள்ளது. இந்த வெப் தொடருக்கு ‘நவரசா’ என்று பெயரிட்டுள்ளதாகவும், 9 தொடர்கள் கொண்ட இந்த வெப் தொடரை மணிரத்னம், ஜெயேந்திரா, சித்தார்த் உள்ளிட்ட 9 இயக்குனர்கள் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரை போற்று படம் திரைக்கு வர தயாராக உள்ளது. அடுத்ததாக ஹரி இயக்கும் அருவா, வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ போன்ற படங்களில் சூர்யா நடிக்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *