பெண்கள் ஹாக்கி போட்டி – இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி

இந்திய பெண்கள் ஹாக்கி அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் ஆக்லாந்தில் நேற்று நடந்த 4-வது ஆட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர் கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. வெற்றிக்கான கோலை கேப்டன் ராணி ராம்பால் 47-வது நிமிடத்தில் அடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *