பிசிசிஐ துணை தலைவர் மஹிம் வர்மா ராஜினாமா

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக சவுரவ் கங்குலி உள்ளார். துணைத் தலைவராக உத்தரகாண்ட்-ஐ சேர்ந்த மஹிம் வர்மா உள்ளார்.

இவர் உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் சங்க தேர்தலில் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சஞ்சய் குசைனை 31-14 என தோற்கடித்து வெற்றி பெற்றார்.

ஒருவர் ஒரு பதவியை மட்டுமே வகிக்க முடியும் என்பதால் பிசிசிஐ-யின் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார். இவர் கடந்த ஆண்டுதான் பிசிசிஐ துணைத் தலைவராக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *