பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டி – ஆஸ்திரேலியா வெற்றி

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் பேட்டி கான்பெர்ராவில் நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. பாபர் அசாம், பகர் ஜமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பகர் ஜமான் 2 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹரிஸ் சோஹைல் 6 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 14 ரன்னிலும், ஆசிஃப் அலி 4 ரன்னிலும் வெளியேறினர்.

பாபர் அசாம் 50 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். இப்திகார் அகமது அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 34 பந்தில் 62 ரன்கள் விளாச பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 151 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா சேஸிங்கை தொடங்கியது. டேவிட் வார்னர் 20 ரன்னிலும், ஆரோன் பிஞ்ச் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

3-வது வீரராக களம் இறங்கிய ஸ்மித் ஆட்டமிழக்காமல் 51 பந்தில் 80 ரன்கள் குவிக்க ஆஸ்திரேலியா 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதல் போட்டி மழையால் கைவிடபட்டதால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *