நெல்லை, கோவையில் இருந்து ஜபல்பூருக்கு சிறப்பு ரெயில்

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க கீழ்க்கண்ட சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

* நெல்லை-ஜபல்பூர்(வண்டி எண்: 01703) இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் அக்டோபர் மாதம் 5, 12, 19, 26-ந்தேதி, நவம்பர் மாதம் 2-ந்தேதிகளில் மாலை 4 மணிக்கு நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* கோவை-ஜபல்பூர்(02197) இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் அக்டோபர் மாதம் 7, 14, 21, 28-ந்தேதி, கோவை ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 7 மணிக்கு இயக்கப்படும்.

* சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-சந்திரகாச்சி(82622) இடையே சுவிதா சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் அக்டோபர் மாதம் 23-ந்தேதி மதியம் 3.15 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *