Tamilவிளையாட்டு

தேசிய சீனியர் ஹாக்கி! – தமிழக அணி சாம்பியன்

9-வது தேசிய சீனியர் ஹாக்கி (பி பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

நேற்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்ற இறுதிப்போட்டியில் தமிழ்நாடு-மத்திய தலைமை செயலக அணிகள் மோதின.

இந்த போட்டியில் மத்திய தலைமை செயலகம் அணியை 4 -3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தமிழகம் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் தமிழ்நாடு, மத்திய தலைமை செயலக அணிகள் மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் இந்த மாதம் இறுதியில் நடைபெறும் ‘ஏ’ டிவிசன் தேசிய சீனியர் ஆக்கி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *