தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் – 499 ரன்களுக்கு இங்கிலாந்து டிக்ளேர்

தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினம் தொடங்கிய இந்த டெஸ்டில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களம் இறங்கி பேட்டிங் செய்த இங்கிலாந்து நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. பென் ஸ்டோக்ஸ் 38 ரன்னுடனும், ஒல்லி போப் 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பென் ஸ்டோக்ஸ் – ஒல்லி போப் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது. மறுமுனையில் ஒல்லி போப்பும் சதம் அடித்தார். சாம் கர்ரன் (44), மார்க் வுட் (42) அதிரடியாக விளையாட இங்கிலாந்தின் ஸ்கோர் 450 ரன்னைத் தாண்டியது.

இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 499 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஒல்லி போப் 135 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் மகாராஜ் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *