Tamilவிளையாட்டு

தல பாட்டு போட, நான் டேன்ஸ் ஆடினேன் – தமிழில் ட்வீட் செய்த ஹர்பஜன்

ஐபிஎல் டி20 லீக்கின் 12-வது சீசன் வருகிற 23-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள் சென்னை வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. பயிற்சிக்கிடையே விளம்பர சூட்டிங்கிலும் கலந்து கொள்கிறார்.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் தமிழில் டுவீட் செய்துள்ளார். அதில், வந்து பொட்டி படுக்கையைக்கூட இறக்கிவெக்கல அதுக்குள்ள ஷூட்டிங்கா. தல @msdhoni பாட்டு போட நான் @mvj888 @JadhavKedar டான்சு ஆட ஒரே டமாசுதான் போங்க.ரெண்டு மாசமும் ஒரே கூத்தும் கும்மாளமும் தான்.ஆனா ஆட்டம்னு வந்துட்டா பாக்கதான போறீங்க இந்த @ChennaiIPL லோட ஆட்டத்த, என்று தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *