டிஎன்பிஎல் கிரிக்கெட் – காரைக்குடிக்கு எதிரான போட்டியில் கோவை வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் காரைக்குடி காளை மற்றும் கோவை கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான 22-வது லீக் ஆட்டம் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து கோவை கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஷாருக்கான் மற்றும் அபினவ் முகுந்த் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்து அணிக்கு வலுவான தொடக்கத்தை அமைத்தனர். இதில் அபினவ் முகுந்த் 32 ரன்களில் ரன் அவுட் ஆனார்.அடுத்த வந்த முகமது அட்னன் கான் 2 ரன்னிலும், அகில் ஸ்ரீநாத் 12 ரன்னிலும், ஆட்டமிழக்க, மறுமுனையில் பொறுப்பாக ஆடி அரைசதம் அடித்த ஷாருக்கான் 59 ரன்களில் கேட்ச் ஆனார்.அதற்கு பின் அந்தோணி தாஸ் 9 ரன்னிலும், பிரதோஷ் ரஞ்சன் பால் 18 ரன்னிலும், கே.விக்னேஷ் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தது. கடைசியில் மலோலன் ரங்கராஜன் 11 ரன்னுடம், அஜித் ராம் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.காரைக்குடி காளை அணியின் சார்பில் ராஜ்குமார் 2 விக்கெட்டுகளும், சுனில் சாம், ஷாஜகான், சுவாமி நாதன், அஸ்வின் குமார், ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்குடி காளை அணியின் தொடக்க வீரர்களாக சூர்யபிரகாஷ் மற்றும் அனிருதா ஆகியோர் களமிறங்கினர். இதில் சூர்யபிரகாஷ் 2 ரன்னிலும், அனிருதா 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.அதற்கு பின் களமிறங்கிய ஸ்ரீனிவாசன் 7 ரன்னிலும், யோ மகேஷ் ரன் எதுவும் எடுக்காமலும், மான் பாப்னா 21 ரன்னிலும், கணேஷ் 20 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஷாஜகான் மற்றும் ராஜ்குமார் அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினர். இதில் ராஜ்குமார் 13 ரன்னில் கேட்ச் ஆனார்.

இறுதியில் காரைக்குடி காளை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசியில் ஷாஜகான் 41 ரன்களுடனும், அஸ்வின் குமார் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

கோவை கிங்ஸ் அணியின் சார்பில் அந்தோணி தாஸ் மற்றும் மலோலன் ரங்கராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், நடராஜன், அஜித் ராம், மணிகண்டன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் காரைக்குடி காளை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *