Tamilசினிமா

ஜோதிகாவின் ஜாக்பாட் படத்திற்கு யு சான்றிதழ்

`குலேபகாவலி’ படத்தை இயக்கிய கல்யாண் அடுத்ததாக ஜோதிகா, ரேவதியை வைத்து ’ஜாக்பாட்’ படத்தை இயக்கியுள்ளார். ஆக்‌ஷன் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைக்க, விஜய் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

இந்நிலையில், சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *