சீன ஓபன் பேட்மிண்டனில் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்த சாய்னா

சீன ஓபன் பேட்மிண்டன் அங்குள்ள சாங்சூ நகரில் நேற்று தொடங்கியது.

இன்று நடப்பு பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான சாய்னா நேவால் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

உலக தர வரிசையில் 8-வது இடத்தில் உள்ள அவர் 10-21, 17-21 என்ற நேர்செட் கணக்கில் 19-ம் நிலை வீராங்கனை பூசனிடம் (தாய்லாந்து) தோற்று வெளியேறினார்.

44 நிமிடத்தில் சாய்னா தோல்வியை தழுவினார். தாய்லாந்து வீரர்களிடம் அவர் தோற்றது 2-வது முறையாகும்.

லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா முதல் சுற்றிலேயே வெளியேறியது பரிதாபமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *