Tamilசெய்திகள்

கொரோனா தனிமையை விரட்ட வழிகாட்டும் இரட்டையர்கள்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவாதிருக்க உலக நாடுகள் பலவும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. இதனால் பலதரப்பட்ட மக்களும் தங்களது வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்நிலையில் எப்போதும் துறுதுறுவென்று இருக்கும் நம் வீட்டுக் குழந்தைகள், மாணவ, மாணவிகள் இந்த கொரோனா தனிமையினால் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 31 க்கு பிறகும் நீட்டிக்கப்படலாம் என்று தகவல்கள் உலாவரும் இந்த தருணத்தில், மன அழுத்தத்தில் தவிக்கும் மாணவ-மாணவிகளை உற்சாகப்படுத்தவும், அவர்களுக்கு சரியானதொரு வழிகாட்டலை ஏற்படுத்தவும் காரைக்காலை சேர்ந்த குட் ஷெப்பர்ட் ஆங்கிலப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் இரட்டையர்களான ஸ்ரீ விசாகன் மற்றும் ஸ்ரீ ஹரிணி ஆகிய இருவரும் தங்களது அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இதுதொடர்பாக அவர்கள் பேசுகையில்,”
கொரோனா தனிமையால் வாடும் பெற்றோர்களுக்கும், மன அழுத்தத்தால் தவிக்கும் மாணவ மாணவிகளுக்கும் எங்களுடைய அனுபவம் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். நாங்கள் ஒன்பது வயதிற்குள்ளாகவே கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கி உலக சாதனை புரிந்துள்ளோம். இந்நிலையில் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டிருக்கும் எங்களைப் போன்ற மாணவ மாணவிகளுக்காக எங்கள் மாஸ்டர் VRS குமார் அவர்கள் எங்களுக்கு கற்றுக் குடுத்து நாங்கள் கற்ற கராத்தே சிலம்பம் போன்ற எண்ணற்ற பயிற்சியை வீடியோ மூலமாக வழங்கியிருக்கிறோம். இந்த பயிற்சியை ஏராளமான மாணாக்கர்கள் செய்து மகிழ்ச்சி அடைந்ததாகவும், மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டதாகவும் பின்னூட்டங்கள் மூலமாக தெரிவித்திருக்கிறார்கள்.

இதனால் மேலும் அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக எங்களுக்கு மிகவும் பிடித்த பாட்டியிடம் பல்லாங்குழி ஆட்டம், தாயக்கட்டை உடனான பரமபத விளையாட்டு, கேரம் போர்டு, செஸ் போர்டு … ஆகிய உள்ளரங்க விளையாட்டுகளை விளையாடினோம். இதன்போது எங்களுக்குத் தெரிந்த நுட்பங்களை பாட்டிக்கும், பாட்டி காலத்து நுட்பங்களை நாங்களும் தெரிந்து கொண்டோம் . இதன் காரணமாக உடலும் மனமும் ஒருமுகப்படுத்தும் வகையிலான பயிற்சியினை பெற்றோம். இதற்கு நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவிலான பாராட்டுகள் வந்து கொண்டே இருக்கின்றன. எனவே இதனை இதுவரை காணாத மாணவர்களும், பெற்றோர்களும் தங்களுடைய பிள்ளைகளுக்கு இந்த வீடியோவினை பதிவிறக்கம் செய்ய அனுமதித்தால், அவர்களும் தங்களை உற்சாகப்படுத்திக் கொள்வார்கள். தனிமையில் தவிக்கும் அவர்கள் அதிலிருந்து விடுபட்டு தங்களை சுய சார்புடன் மேம்படுத்திக் கொள்வார்கள்”. என்றனர்.

இதனிடையே இந்த இரட்டையர்கள் ஏற்கனவே ஒன்பது வயதுக்குள் உலகிலேயே முதல்முறையாக இரண்டு பிளாக் பெல்ட் மற்றும் கராத்தேவில் அதிக அளவிலான பதக்கங்களை குவித்து உலக சாதனை செய்தவர்கள் என்பதும், இவர்களின் வீடியோக்களை உளவியல் நிபுணர்களும், சமூக ஆர்வலர்களும் பார்வையிட்டு, ஏனையவர்களுக்கும் பரிந்துரைக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *