Tamilசெய்திகள்

காஷ்மீரில் பா.ஜ.க பிரமுகர் சுட்டுக் கொலை – பிரதமர் மோடி கண்டனம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தின் பா.ஜ.க. துணை தலைவராக இருந்தவர் குல் முகமது மிர். நேற்று இரவு அவரது வீட்டுக்கு சென்ற பயங்கரவாதிகள் துப்பாக்கியால் அவரை சரமாரியாக சுட்டுக் கொன்றனர். இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

பயங்கரவாதிகள் பா.ஜ.க. பிரமுகரை சுட்டுக் கொன்றதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க. பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பிரதமர் மோடி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க. பிரமுகர் குல் முகமது மிர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு பாடுபட்டதை இச்சமயத்தில் நினைவு கூர்கிறேன். இந்தியாவில் இதுபோன்ற வன்முறை சம்பவங்களுக்கு இடமில்லை.

குல் முகமது மிரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *