காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் கைது!

காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த பகுதியை பாதுகாப்பு படை வீரர்கள் சுற்றி முற்றுகையிட்டனர்.

இதில் 2 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர். மற்ற பயங்கரவாதிகள் தப்பி சென்றனர். அவர்களை பாதுகாப்பு படை வீரர்கள் தொடர்ந்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் 13 நாள் தேடுதலுக்கு பிறகு கந்தர்பால் பகுதியில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் இன்று கைது செய்தனர். இருவரும் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

அவர்களிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான இரு பயங்கரவாதிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *