ஓய்வுக்கு பிறகு ஓவியராக விரும்பும் கிரிக்கெட் வீரர் டோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான டோனி, ஓய்வுக்கு பின்னர் தான் என்ன செய்யப்போகிறார் என்ற ரகசியத்தை உடைத்திருக்கிறார். இது குறித்து வெளியிட்ட வீடியோவில் டோனி கூறியிருப்பதாவது:

சிறு வயதில் இருந்தே எனக்கு ஒரு சிறந்த ஓவிய கலைஞர் ஆக வேண்டும் என்பது தான் ஆசை. நான் கிரிக்கெட் பயிற்சியில் கவனம் அதிகம் செலுத்தியபோதிலும், ஓவியம் தீட்டுவதை விடவில்லை. நான் வரைந்த சில ஓவியங்களை உங்களிடம் காட்ட விரும்புகிறேன்.

நான் எனது முதல் ஓவிய கண்காட்சியை துவக்க பணிகள் மேற்கொண்டு வருகிறேன். இதற்கு சில காலம் ஆகும். அதற்கு முன் எனது ஓவியங்களை உங்களுக்கு காட்டுகிறேன். உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். நான் ஓவிய கலை துறைக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.

எனது அனைத்து ஓவியங்களையும் பாருங்கள். அவற்றில் ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டால் என்னிடம் கூறுங்கள். அதனை ஏற்று, நான் செய்ய தயாராக இருக்கிறேன். நான் நடத்தவுள்ள ஓவிய கண்காட்சிக்கு அனைவரும் வர வேண்டும் என விரும்புகிறேன்.

எனது இந்த வீடியோவை காண வந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன் பின்னர் ஒரு குறிப்பிட்ட ஓவியத்தை தனது விருப்ப ஓவியமாக காண்பித்தார். இதில் ஒரு சிறுவன் கைகளில் பந்து, பேட் ஆகியவற்றை வைத்து கொண்டு வெற்றி அடைந்த சந்தோஷத்தை வெளிப்படுத்துவது போல தீட்டியுள்ளார். மேலும் அச்சிறுவன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறமான மஞ்சள் நிற ஆடை, தொப்பி ஆகியவை அணிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *