ஐபிஎல் தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் – பிராவோ பேட்டி

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரரான பிராவோ, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் விளையாடி வருகிறார். அந்த அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழும் இவர் தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை எந்த அணி வெல்லும்? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

அதில், பிராவோ கூறுகையில், “ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எல்லா அணிகளுமே சென்னை சூப்பர் கிங்சுக்கு சவாலானவை தான். இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் தான் சென்னை அணிக்கு எப்போதும் கடினமான அணியாக இருந்து வருகிறது. ஐ.பி.எல். வரலாற்றை புரட்டிப்பார்த்தால் மும்பை இந்தியன்ஸ் எப்படிப்பட்ட கடினமான எதிரணி என்பது தெரியும். ஆனால் ஐ.பி.எல்.-ல் எல்லா அணிகளும் சிறந்தவை தான். அனைத்து அணிகளையும் சென்னை சூப்பர் கிங்ஸ் மதிக்கிறது. இதே போல் மற்ற அணிகளும் சென்னை அணி மீது மதிப்பும், மரியாதையும் வைத்து உள்ளன. இது கடும் போட்டியும், சவாலும் நிறைந்த தொடர். எந்த அணியாலும் ஜெயிக்க முடியும்.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *