ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது

கொரோனா வைரஸ் தொற்றால் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டி20 லீக்கை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடைபெறும் என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்திருந்தார்.

நேற்று ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்து விட்டதாகவும், போட்டி செப்டம்பர் 19-ந்தேதி தொடங்கி நவம்பர் 10-ந்தேி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் 26-ந்தேதி இந்திய வீரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புறப்படுவார்கள், போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெண்கள் ஐபிஎல் லீக்கிற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *