ஊரடங்கால் உத்தரகாண்ட் மாநிலத்தில் 24 பேர் தற்கொலை!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 24 ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. விவசாயம் சார்ந்த தொழில்களும் பாதிக்கப்பட்டது.

ஊரடங்கு காரணமாக பலர் வேலை இழந்து பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகினர். இதனால், சிலர் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் கொடிய முடிவுகளையும் எடுத்தனர்.

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் டும்கா மாவட்டத்தில் ஊரடங்கு தொடங்கிய நாளான மார்ச் 24 முதல் மே 24 வரையிலான இரண்டு மாதங்களில் மொத்தம் 24 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தற்கொலை செய்து கொண்டவர்களில் 20 பேர் தூக்கிட்டும், 4 பேர் விஷம் குடித்தும் தங்கள் உயிரை மாய்த்துள்ளனர். பயம், கவலை, தூக்கமின்மை, கோபம் போன்ற பல்வேறு காரணங்களால் இத்தகைய தற்கொலைகள் நடந்திருக்கலாம் என மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும், ஊரடங்கின் போது டும்கா என்ற ஒற்றை மாவட்டத்தில் நடந்த இத்தனை (24) தற்கொலை சம்பவங்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *