Tamilவிளையாட்டு

உலக கோப்பை ஆக்கி – இங்கிலாந்தை வீழ்த்தி 3வது இடம் பிடித்த ஆஸ்திரேலியா

14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக், காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் முடிந்துள்ளன.

நேற்று நடைபெற்ற மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதின.

இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலிய வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் கோல் அடித்தனர்.

இறுதியில், 8 – 1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதுடன் வெண்கலம் வென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *