உலகக்கோப்பையை வெல்ல இங்கிலாந்துக்கு வாய்ப்பு – கவாஸ்கர் கருத்து

உலகக்கோப்பை போட்டி குறித்து இந்திய அணி முன்னாள் கேப்டனும் டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியதாவது:-

உலக கோப்பையை வெல்ல இந்தியாவை விட இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. உள்ளூரில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமே.

கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து அணி மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் கடினமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

இங்கிலாந்து அணி இதுவரை உலக கோப்பையை வென்றது இல்லை. 3 முறை இறுதிப்போட்டியில் தோற்று உள்ளது. 1979-ல் வெஸ்ட்இண்டீசிடமும், 1987-ல் ஆஸ்ரேலியாவிடமும், 1992-ல் பாகிஸ்தானிடமும் தோற்று கோப்பையை இழந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *