இரண்டாவது முறையாக நானியுடன் கைகோர்த்த அனிருத்

’நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார் நானி. சமீபத்தில் இவர் நடிப்பில் ஜெர்சி படம் வெளியானது. தற்போது இவர் ‘கேங் லீடர்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே ஜெர்சி படத்திற்கு இசையமைத்திருந்த அனிருத், நானியின் ’கேங் லீடர்’ படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

விக்ரம் கே குமார் இயக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை 15ந் தேதியும், முதல் பாடல் ஜூலை 18ந் தேதியும், டீசர் ஜூலை 24ந் தேதியும் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் இந்த படம் குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் நானி: நாங்கள் சந்தித்தோம், நாங்கள் தயார், நாங்கள் தான் கேங், நான் தான் கேங் லீடர் என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *