Tamilவிளையாட்டு

இந்திய ராணுவ வீரர்களுக்காக கோப்பையை வெல்ல வேண்டும் – விராட் கோலி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. ஜூலை 14-ந்தேதி வரை நடக்கும் இந்தத் தொடரில், இந்தியா முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ந்தேதி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

இதற்கு மே 25-ந்தேதி நியூசிலாந்தையும், மே 28-ந்தேதி வங்காளதேசத்தையும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா எதிர்த்து விளையாடுகிறது.

உலகக்கோப்பைக்கான இந்திய அணி இன்று நள்ளிரவு மும்பை விமான நிலையத்தில் இங்கிலாந்து புறப்படுகிறது. இதற்கு முன் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி ஆகியோர் பேட்டியளித்தனர்.

அப்போது விராட் கோலி கூறுகையில் ‘‘நீங்கள் ஏராளமான வகைகளில் இருந்து உத்வேகத்தை பெறலாம். ஆனால், ஒரு விஷயத்தை இங்கு சுட்டிக்காட்டுவது மிகப்பெரியது. இந்திய ராணுவத்தை பற்றி பேசும்போது, அதைவிட சிறந்த உத்வேகம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர்கள் இந்திய நாட்டிற்காக செய்த தியாகத்தைப் பற்றி பேசும்போது, அதனுடன் வேறு எதையும் ஒப்பிட இயலாது.

இதே உத்வேகத்துடன் நாம் சென்றால், ராணுவத்திற்காக ஏதாவது செய்ய முடியும். உயர்ந்த நிலை பேரார்வத்தை உங்களிடம் இருந்து வெளிப்படுவதை பார்க்கலாம். ஆனால், இதுவெல்லாம் ஏராளமான மற்ற காரணிகளையும் சார்ந்துள்ளது. உலகக்கோப்பையில் விளையாடும்போது ஒவ்வொரு வீரர்களுக்கு தனிப்பட்ட உத்வேகம் இருக்கும். ஒவ்வொருவரும் ராணுவத்தை மனதில் நினைத்தால், அதன்மூலம் கூடுதல் ஆற்றல் கிடைக்கும்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *