Tamilவிளையாட்டு

இந்திய கிரிக்கெட் வரலாற்றுக்கு பெருமை சேர்த்த கங்குலி!

பகல்-இரவு டெஸ்ட் 2015-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டாலும் 4 ஆண்டுகளுக்கு பிறகுதான் இந்திய அணி தற்போது அதில் விளையாடுகிறது. இந்த வரலாற்று பெருமைக்கு எல்லாம் கங்குலிதான் காரணம்.

பகல்-இரவு டெஸ்டில் விளையாடுவதிலும், அந்த போட்டியை நடத்துவதிலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) விருப்பம் இல்லாமலேயே இருந்தது. முன்னாள் கேப்டனான கங்குலி கடந்த 1 மாதத்துக்கு முன்புதான் பி.சி.சி.ஐ.யின் புதிய தலைவராக பொறுப்பேற்றார். அவரது தீவிர முயற்சியால் இந்தியாவில் முதல் முறையாக பகல்-இரவு டெஸ்ட் நடத்தப்படுகிறது.

வங்காளதேச கிரிக்கெட் வாரியத்துடன் பேசி அந்நாட்டை இதில் விளையாட சம்மதிக்க வைத்தார். இந்திய அணி கேப்டன் விராட்கோலி 3 வினாடியில் இதை ஏற்றுக் கொண்டதாக கங்குலி தெரிவித்து இருந்தார். அவரது கிரிக்கெட் நிர்வாகத்தில் இந்த பகல்-இரவு டெஸ்ட் புதிய மைல் கல்லாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *