Tamilவிளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்! – முதலிடம் பிடித்த புஜாரா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல பேட்டிங்கில் புஜாராவும், பந்துவீச்சில் பும்ராவும் முக்கிய பங்கு வகித்தனர்.

புஜாரா 4 டெஸ்டில் 7 இன்னிங்சில் விளையாடி 521 ரன் குவித்து முதல் இடத்தை பிடித்துள்ளார். அவரது சராசரி 74.42 ஆகும். அவர் இந்த தொடரில் 3 சதம் அடித்துள்ளார். முதல் டெஸ்டில் 173 ரன்னும், 3-வது டெஸ்டில் 106 ரன்னும், 4-வது டெஸ்டில் 193 ரன்னும் எடுத்து முத்திரை பதித்தார். மேலும் ஒரு அரைசதமும் புஜாரா அடித்து இருந்தார்.

புஜாராவுக்கு அடுத்தப்படியாக ரிசப் பந்த் 7 இன்னிங்சில் 350 ரன் குவித்தார். சராசரி 58.33 ஆகும். அதிகபட்சமாக 159 ரன் (அவுட்இல்லை) குவித்து இருந்தார்.

விராட்கோலி 1 சதம், 1 அரைசதத்துடன் 282 ரன்கள் குவித்து 3-வது இடத்தை பிடித்தார். அவரது சராசரி 40.28 ஆகும். அதிகபட்சமாக 123 ரன் எடுத்தார்.

வேகப்பந்து வீரர் பும்ரா 21 விக்கெட் கைப்பற்றி முதலிடம் பிடித்தார். அவர் 33 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்துவீச்சு ஆகும். ஒரு டெஸ்டில் 86 ரன் கொடுத்து 9 விக்கெட் கைப்பற்றியது சிறந்ததாக இருந்தது.

மற்ற இந்திய வீரர்களில் முகமது‌ சமி 16 விக்கெட்டும், இஷாந்த்சர்மா 11 விக்கெட்டும் (3 டெஸ்ட்), ஜடேஜா 7 விக்கெட்டும் (2 டெஸ்ட்), அஸ்வின் 6 விக்கெட்டும் (1 டெஸ்ட்), குல்தீப்யாதவ் 5 விக்கெட்டும் (1 டெஸ்ட்) எடுத்து இருந்தனர்.

ஆஸ்திரேலிய வீரர்களில் நாதன் லயன் 21 விக்கெட் கைப்பற்றி இருந்தார். கம்மின்ஸ் 14 விக்கெட்டும், ஹாசில்வுட், ஸ்டார்க் தலா 13 விக்கெட்டும் எடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *