அதிவேகத்தில் 8 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் – 2 வது இடத்திற்கு முன்னேறிய ஹசிம் அம்லா

நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க தொடக்க வீரர் ஹசிம் அம்லா 55 ரன் எடுத்தார்.

24-வது ரன்னை தொட்ட போது அவர் ஒரு நாள் போட்டியில் 8 ஆயிரம் ரன்னை எடுத்தார். 36 வயதான அம்லா 176 இன்னிங்சில் இந்த ரன்னை தொட்டார். இதன் மூலம் அதிவேகத்தில் 8 ஆயிரம் ரன்னை எடுத்த 2-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்திய அணி கேப்டன் விராட்கோலி 175 இன்னிங்சில் இந்த ரன்னை எடுத்து சாதித்து இருந்தார்.

டிவில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா) 182 இன்னிங்சிலும் கங்குலி, ரோகித் சர்மா (இந்தியா) தலா 200 இன்னிங்சிலும், 8 ஆயிரம் ரன்னை தொட்டு இருந்தனர்.

ஹசிம் அம்லா 2 ஆயிரம், 3 ஆயிரம், 4 ஆயிரம், 5 ஆயிரம், 6 ஆயிரம் மற்றும் 7 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் கடந்தவர் என்ற சாதனையில் உள்ளார். விராட்கோலி 8 ஆயிரம், 9 ஆயிரம், 10 ஆயிரம், 11 ஆயிரம் ரன்களை அதிவேகத்தில் கடந்தவர் என்ற சாதனையில் இருக்கிறார்.

8 ஆயிரம் ரன்னை எடுத்த 4-வது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையை அம்லா பெற்றார். காலிஸ், டிவில்லியர்ஸ், கிப்ஸ் ஆகியோருக்கு அடுத்தப்படியாக அவர் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *