தேசிய போட்டியில் பங்கேற்க சென்ற வில்வித்தை வீரர்கள் பலி!
மத்திய பிரதேசம் போபாலில் தேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஜார்க்கண்டில் இருந்து ஜேஸ்பால் சிங் (19), சராஸ் சோரன் (21) ஆகியோர் காரில் போபால் வந்து கொண்டிருந்தனர்.
மத்திய பிரதேசம் ஷஹ்டோல் மாவட்டம் லால்பூர் ஏர்ஸ்ட்ரிப் அருகே வரும்போது லாரியின் பின்பக்கம் கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.