X

மோடியை மன்னிக்கக் கூடாது – யஷ்வந்த் சின்ஹா

குஜராத் மாநிலத்தின் ஜுனாகட் மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்ஹா நேற்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

குஜராத் மாநில அரசு அனைத்து வழிகளிலும் தோற்றுப்போன அரசு. விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் தலித்கள் உள்ளிட்ட அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் அங்கம் வகித்ததற்காக உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

ஆனால், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் மோடியை மன்னிக்கக் கூடாது. விவசாயிகளுக்காக அவர் எந்த புதிய திட்டத்தையும் அறிவிக்கவில்லை என குற்றம் சாட்டினார்.