உலக மல்யுத்த சாம்பியன் ஷிப் போட்டி ஹங்கேரி புடாபெஸ்டில் நடந்து வருகிறது.
இதன் பெண்களுக்கான 57 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்திய வீராங்கனை பூஜாதன்டா- 2017-ம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியனான கிரேஸ் ஜேக்கப் புல்லன் மோதினர்.
இதில் பூஜாதன்டா 10-7 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை வென்றார். இது இந்த உலக சாம்பியன் ஷிப் போட்டியில் 2-வது பதக்கமாகும். இதற்கு முன்பு ஆண்கள் பிரிவில் பஜ்ரங் புனியா வெள்ளி பதக்கம் வென்று இருந்தார்.
உலக சாம்பியன் ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற 4-வது இந்திய வீராங்கனை பூஜாதன்டா ஆவார். இதற்கு முன்பு அல்காதோமர் (2006), கீதா (2012), பபிதா போகத் (2012) ஆகியோர் வெண்கல பதக்கம் வென்று இருந்தனர்.