இந்தியா ‘ஏ’ – ஆஸ்திரேலியா ‘ஏ’ பெண்கள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மும்பையில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், அதன்பின் வந்த மெக்ராத் (58), கிரஹாம் (48), ஸ்டேலன்பெர்க் (47) சிறப்பாக விளையாடி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா ‘ஏ’.
பின்னர் 272 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ வீராங்கனைகள் களம் இறங்கினார்கள்.
தொடக்க வீராங்கனை புனியா 4 ரன்னில் வெளியேற, அதன்பின் வந்த வைத்தியா, மற்றொரு தொடக்க வீராங்கனை ரவுத் ஆகியோர் டக்அவுட்டில் ஆட்டமிழந்தனர். எஸ் பாண்டே 42 ரன்களும், ப்ரீத்தி போஸ் ஆட்டமிழக்காமல் 62 ரன்களும் அடிக்க இந்தியா ‘ஏ’ 46.2 ஓவரில் 180 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா ஏ 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2-வது போட்டி 17-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 19-ந்தேதி மும்பையில் நடக்கிறது.