வெஸ்ட் இண்டீஸ் எதிரான முதல் டெஸ்ட் போட்டி – இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் பிருத்வி ஷா அறிமுகமாகி உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டருக்கு கணுக்காலில் லேசான காயம் ஏற்பட்டதால் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. கேப்டன் பொறுப்பை பிராத்வெயிட் ஏற்றுள்ளார். சுனில் அம்பிரிஸ் ஷெர்மான் லெவிஸ் ஆகியோர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி உள்ளனர். இரு அணிகளிலும் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் வருமாறு:-

இந்தியா: கோலி (கேப்டன்), ராகுல், பிருத்வி ஷா, புஜாரா, ரகானே, ரிஷப் பன்ட், ஜடேஜா, அஷ்வின், உமேஷ், ஷமி, குல்தீப்

வெஸ்ட் இண்டீஸ்: பிராத்வெயிட்(கேப்டன்), பாவெல், ஹெட்மையல், ஹோப், சேஸ், அம்பிரிஸ், டோரிச், பால், பிஷூ, லெவிஸ், கேபிரியேல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *