வெஸ்ட் இண்டீஸுன் தற்காலிக பயிற்சியாளராக நிக் போதாஸ் நியமனம்
வெஸ்ட் இண்டீஸ் தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஸ்டூவர்ட் லா. இவர் இங்கிலீஷ் கிரிக்கெட் கவுன்டியின் மிடில்செக்ஸ் அணிக்கு பயிற்சியாளராக செல்ல இருப்பதால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் பீல்டிங் பயிற்சியாளராக இருக்கும் நிக் போதாஸ் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நிக் போதாஸ் வங்காள தேச அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின்போது பொறுப்பை ஏற்றுக் கொள்வார். ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் பயிற்சியாளராக நீடிப்பார்.