வீரம், வேதாளம் மற்றும் விவேகம் வெற்றிப்படங்களை தொடர்ந்து அஜித் நான்காவது முறையாக சிறுத்தை சிவாவுடன் இணைந்துள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படம் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும்படி பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி சமூகவலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இரண்டாவது லுக் போஸ்டர் இன்று காலை 10.30 மணிக்கு வெளியாகும் என்று நேற்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. அதன்படி இன்று சரியாக 10.30 மணிக்கு இரண்டாவது லுக் வெளியாகி ட்விட்டரில் ட்ரெண்டிங் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது.
திருவிழா கூட்டத்தின் மத்தியில் அஜித் புல்லட் வண்டியில் கம்பீரமாக வருவது போல் வெளியாகியுள்ள இந்த போஸ்டர் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் இந்த போஸ்டரால் சமூகவலைத்தளங்களே திருவிழாக்கோலமாக காட்சியளிக்கிறது.