‘விஸ்வாசம்’ படத்தின் இரண்டாவது போஸ்டர் நாளை வெளியீடு

Viswasam first look

அஜித் நடிப்பில், சிவா இயக்கி வரும் படம் ‘விஸ்வாசம்’. அஜித் இரு வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் நாளை காலை 10.30 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப் படத்தில், தெலுங்கு வில்லன் நடிகரான ரவி அவானா, வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் அஜித் ‘தூக்கு’ துரை என்ற கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறையில் இந்தப் படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools