சென்னையில் காவலராக பணிபுரிந்து வந்தவர் கார்த்திக்வேல். இவருக்கு பேஸ்புக் மூலம் சரஸ்வதி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கி உள்ளனர். சரஸ்வதியின் சொந்த ஊர் விழுப்புரம் அருகே உள்ள அன்னியூர்.
இந்நிலையில், இன்று காலை அன்னியூர் சென்ற கார்த்திக்வேல் சரஸ்வதியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்தால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கார்த்திக்வேலால் சுட்டுக்கொல்லப்பட்ட சரஸ்வதி, எம்.பி.பி.எஸ். 3 ஆம் ஆண்டு படித்து வந்தார். மருத்துவ மாணவியான சரஸ்வதிக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிக்கச்சென்றபோது, ஏற்பட்ட வாக்குவாதத்தில், காவலர் அவரை சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
சத்திய மங்கலத்தைச் சேர்ந்த கார்த்திக்வேல் பேஸ்புக் மூலம் சரஸ்வதியை காதலித்ததாகவும், மருத்துவ படிப்புக்கு பிறகு சரஸ்வதியிடம் மாற்றம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் இரண்டு உயிர்களை காவு வாங்கியிருக்கலாம்.