விஜயுடன் மூன்றாவது முறையாக இணையும் யோகி பாபு!
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, இல்லாத படங்களே இல்லை, என்று சொல்லும் அளவுக்கு அனைத்து படங்களிலும் நடித்து விடுகிறார். எதாவது ஒரு காட்சியிலாவது அவர் தோன்றும் விதத்தில் இயக்குநர்கள் அவருக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துவிடுகிறார்கள்.
இதற்கிடையில், ‘மெர்சல்’ படத்தின் மூலம் முதல் முறையாக விஜயுடன் இணைந்து நடித்த யோகி பாபு, தீபாவளிக்கு வெளியான ‘சர்கார்’ படத்திலும் நடித்திருந்தார்.
இந்த நிலையில், அட்லீ இயக்கத்தில் உருவாக உள்ள விஜயின் 63 வது படத்திலும் யோகி பாபு நடிக்க உள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் விவேக் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து.