Tamilசினிமா

வைரமுத்து மீதான பாலியல் புகார் – கருத்து கூற மறுத்த பாரதிராஜா

கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பாடகி சின்மயி குற்றம் சாட்டி வருகிறார். தமிழ் சினிமாவிலும் பொதுவெளியிலும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் இந்த குற்றசாட்டுகளுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் குரல்கள் எழுந்துள்ளன.

கவிஞர் வைரமுத்துவுடன் இணைந்து பயணித்தவர்கள் டைரக்டர் பாரதிராஜாவும், இசையமைப்பாளர் இளையராஜாவும். பல வெற்றி படங்களை கொடுத்த இந்த கூட்டணி பிரிந்தது.

இலங்கை நாட்டில் கிளி நொச்சியில் ஒளிப்படப் பிடிப்பாளர் சங்கம் நேற்று நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் மூத்த ஒளிப்படப் பிடிப்பாளர்கள் சிறப்பிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இலங்கை எம்.பி.சி.சிறிதரனும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். பின்னர் யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் கவிஞர் வைரமுத்து மீதான ‘மீ டூ’ பாலியல் புகார்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பாரதிராஜா “என் தொழில் தொடர்பாக சினிமா தொடர்பாக எது கேட்டாலும் பதில் சொல்வேன். டூ மீட் மீ ஐ மீட் யூ அவ்வளவுதான்” என பதில் அளித்தார்.

‘ஒரு இயக்குனராக பாலியல் புகார்கள் குறித்து என்ன கருதுகிறீர்கள்?’ என பாரதிராஜாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாரதிராஜா “மீ டூ என்றால் என்ன? சொல்லு. மீ டூன்னா என்னா? என்ன பிரச்சனை? என்ன பிரச்சினை” என கேள்வி கேட்டவரிடம் கோபப்பட்டார்.

மற்றொரு பத்திரிகையாளர், ‘வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்படுகிறதே?’ என கேள்வி எழுப்ப “நீ பார்த்தியா? நீ பார்த்தியா? கேள்விப்பட்டிருக்கிறே… கேள்விபட்டதுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. ஆதாரம் இருந்தால் பதில் சொல்லலாம்” என்று சொல்லிவிட்டு வேகமாக முடித்துக் கொண்டார்.

இளையராஜாவின் 75 வது பிறந்தநாள் நேற்று தனியார் கல்லூரி ஒன்றில் கொண்டாடப்பட்டது.

இதில் கலந்துகொண்ட இளையராஜா நிகழ்ச்சி முடிந்ததும் பேட்டி அளித்தார். அப்போது மீடூ பற்றி கேள்வி கேட்டதற்கு ’ரொம்ப நன்றாக கேள்வி கேட்கிறாய்’ என்று சொல்லி விட்டு பதில் அளிக்காமல் மறுத்து சென்றுவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *