‘வட சென்னை’ எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் – பாவல் நவகீதன்
மெட்ராஸ், குற்றம் கடிதல், மகளிர் மட்டும் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர் பாவல் நவகீதன். அடிப்படையில் டைரக்டரான இவர் இப்போது முழுநேர நடிகராக மாறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது ”உதவி இயக்குனராக வந்த என்னை மெட்ராஸ் படத்தில் நடிக்க வைத்தவர் ரஞ்சித் தான். விஜி என்ற அந்த வேடம் எனக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. வடசென்னை படம் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். வித்தியாசமான வில்லன் வேடம். வடசென்னை படம் தான் நான் டைரக்டர் ஆவதா? இல்லை நடிகராக தொடர்வதா என்பதை முடிவு செய்யும் என்று வெற்றிமாறனிடம் கூறினேன். அவர் என்னிடம் ‘உனக்கு நடிகராக ஒரு பெரிய இடம் காத்திருக்கிறது. சிறப்பாக நடித்துள்ளாய்.
எனவே நடிகராக உனது கேரியரை தொடர்ந்து அமைத்துக்கொள். பின்னர் டைரக்டர் ஆகலாம் என்றார். இந்த படத்தில் ஒரிஜினலாக சில இடங்களில் வெட்டு விழுந்து ரத்தம் கொட்டியிருக்கிறது. அதோடு நடித்திருக்கிறேன்.” என்றார்.